Thursday 12 January 2012

இந்தியாவிற்கு தேசிய மொழி கிடையாது

என்  உணர்வுள்ளு  தமிழ் மக்களே  நான்  தற்பொழுது  கோவாவில்  பணிபுரிகிறேன்  அதனால்  என்  தொழிற்ச்சாலையில் ஏராளமான ஹிந்தி  பேசும்  பணியாளர்கள்  உள்ளனர்  ஆனால்  எனக்கு  ஹிந்தி  தெரியாது  இந்த  ஒரு  காரணத்தினாலேயே  நான்  மிகவும்  கேவலமாக நடத்தப்பட்டேன் படுகிறேன் ஒரு  முறை  என்னிடம்  வந்து  ஒரு  தொழிலாளர்  ஹிந்தியில்  பேசினான்  நான்  அவனிடம்  எனக்கு  ஹிந்தி  தெரியாது  என்றேன்  பின்பு  அவன்  என்னிடம்  உங்கள்  தமிழ்நாட்டில்  தான் இந்தமாதிரி  கேனத்தனமாக  உள்ளீர்கள்  நமது  தேசிய  மொழியைக்கூட  கற்றுக்கொள்ள  மாட்டீர்கள்  என்று  என்னையும்  என்  தமிழ்மக்களையும்  வசை  பாடினான்  நான்  அவனுக்கு  தக்கபதிலடி  அப்போதே  கொடுத்தேன்  அதாவது  நாம்  நாட்டின்  தேசிய  மொழி  ஹிந்தி  என்று  உனக்கு  யார்  சொன்னது  என்றேன்  இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் 343 சரத்தின்படி, “தேவநகரியிலுள்ள இந்தி ஆட்சி மொழியாகும்என்பதுதான் நம்  நாட்டிற்கு  தேச்யமொழியே  கிடையாது  என்றேன்  அதற்க்கு  அவன்  ஹிந்திதான்  தேசிய  மொழி  என்றான்  (அவன்  என்னுடன்  பணிபுரியும்  தமிழ்  பணியாளர்களிடமும்  சொன்னான்  அவர்கள்  அதற்க்கு  தமிழனின்  மானத்தை  வாங்காதே  உன்னால்  தமிழர்களின்  மானம்  போகிறது  என்றான்  என்  தமிழனே  என்னிடம்  இந்த  கேள்ள்விய  கேட்டான்  தேசிய  பறவை  தேசிய  மிருகம்  தேசிய  கீதம்  என்று  இருக்கும்  பொது  ஏன்  தேசிய  மொழி  இருக்காத  என்றான்  பின்பு  தொழிற்சாலை  முழுவதும்  இந்த  வாதம்  பரவியது  என்னுடன்  பணிபுரியும்  அனைத்து  ஹிந்தி  பணியாளர்களும்  என்னிடம்  வாதம்  செய்ய  வந்தனர்   அனைவரிடமும்  வாதம்  செத்தேன்  எல்லோரும்  என்னை  பார்த்து  ஏளனம் செய்தனர்  நான்  கவலைப்படவில்லை  அவர்களுக்கு  பதிலளித்தேன்  கீழ  உள்ளவாறு  )  இல்லை  ஹிந்தி  மற்றும்  இங்கிலீஷ்  இந்த  இரண்டு  மொழிகளுமே  நம்  நாட்டின்  அலுவலக  மொழிகளே  தவிர  நம்  நாட்டின்  தேசியமொழி  கிடையாது  நம்  நாட்டின்  சட்டத்தில்  எந்தவொரு  இடத்திலும்  ஹிந்தி  அங்கீகரிக்கப்பட்ட  தேசியமொழியாக  அரசியலமைப்பு  சட்டத்திலும்  கூறவில்லை  நாட்டில்  பெரும்பாலானோர்  நம்  தேசிய  மொழி   ஹிந்தி  என  எண்ணுகின்றனர்  அது  மிகவும்  தவறு  அதற்க்கான  விவாதம்  4 may 2010 இல்  லோக்சபாவிலும்  நடந்துள்ளது  அந்த  விவாதத்திலும்  தெளிவுபடுத்தி  உள்ளார்கள்  ஹிந்தி  நமது  அலுவலக  மொழி  மட்டுமே  என்று  அதனால்  எந்தவொரு  தமிழனும்  தயங்காமல்  வேற்று  மாநிலத்தவனிடம்  கூறுங்கள்  ஹிந்தி  தேசிய  மொழி  அல்ல  என்று  அதற்க்கு  இன்னொரு  ஆதாரம்  குஜராத்  உயர்  நீதிமன்றம்  தீர்ப்புகூட   அளித்துள்ளது  ஹிந்தி  நமது  தேசிய  மொழி  அல்ல  என்று   அந்த  தீர்ப்பில்  கூறியுள்ளது  உங்களுக்காக  இங்கே 
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக் கொண்டு எழுதுகிறார்கள்,பேசுகிறார்கள், படிக்கிறார்கள். ஆனால் இந்தியாவுக்கென 'தேசிய மொழி' என்று எதுவும் கிடையாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று கூறிக் கொள்வோர் பலர். குறிப்பாக வட மாநிலங்களில்தான் இந்தக் கருத்து ரொம்ப அதிகம். ஆனால் அப்படியெல்லாம் கிடையாது,இந்தியாவுக்கென்று தேசிய மொழியே கிடையாது என்று சம்மட்டியால் அடித்தது போன்ற ஒரு தீர்ப்பை
அளித்துள்ளது குஜராத் உயர்நீதிமன்றம்.
சுரேஷ் கச்சாடியா என்பவர் கடந்த ஆண்டு ஒரு பொது நல மனுவை தாக்கல் செய்தார். அதில், உணவுப்பொருள் தயாரிப்பாளர்கள் தாங்கள் விநியோகிக்கும் உணவுப் பொருள் அடங்கிய பாக்கெட்களில் உணவின் விலை, அதில் அடங்கியுள்ள பொருட்கள்,தயாரிப்பு தேதி உள்ளிட்டவற்றை குறிப்பிடும்போது
கண்டிப்பாக இந்தியிலும் குறிப்பிட வேண்டும் என மத்திய அரசுக்கும்,மாநில அரசுக்கும் உத்தரவிட வேண்டும்
காரணம்,இந்தி நமது தேசிய மொழியாகும்.நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்தியில்தான் புரிந்து கொள்கிறார்கள். எனவே இந்தி மொழியில் இவை இடம் பெறாமல் போவதால்,அவர்களுக்கு தாங்கள் வாங்கும் பொருட்களின்
விவரம் தெரியாமல் போய் விடுகிறது என்றார்
இந்த மனு தலைமை நீதிபதி
எஸ்.ஜே.முகாபாத்யாயா தலைமையிலானபெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தபோது,மனுதாரரின் கோரிக்கையை முற்றாக நிராகரித்தனர்.
மேலும்
மனுதாரரின் வக்கீலைப் பார்த்து, இந்தி, இந்தியாவின் தேசியமொழி என்று அங்கீகரித்து எங்காவதுஉத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதா என்று கேட்டனர். அதற்கு எதிர் மறை பதிலை அளித்தார் வக்கீல்.
தொடர்ந்து நீதிபதி முகோபாத்யாயா பேசுகையில், இந்தி என்பது இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்று மட்டுமே. அது தேசிய மொழி அல்ல. இதுவரை இந்தியை தேசிய மொழியாக அறிவித்து எந்த உத்தரவையும் யாரும் பிறப்பிக்கவி்லை.
நமது அரசியலமைப்புச் சட்டமும் இந்தியை அதிகாரப்பூர்வ மொழியாக
மட்டுமே அங்கீகரித்துள்ளதே தவிர தேசிய மொழியாக கூறவில்லை.
எனவே இந்தி அல்லது தேவநாகரி மொழிகளில் பொருட்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. ஆங்கிலத்தை பயன்படுத்துவது அவரவர் உரிமை என்று தீர்ப்பளித்தனர் ..................................................
இவ்வளவு  ஆதரங்களையும்  காட்டிய  பிறகும்  இவர்களின்  ஆட்டம்  நின்றது  என்றீர்கள  இல்லை  அவர்கள்  என்னிடம்  வந்து   ஹிந்தி  தான்  தேசிய  மொழி  நம்  நாட்டில்  குழந்தையை  கேட்டால்  கூட  சொல்லும்  நம்  நாட்டின்  அனைத்து  பாட  புத்தகத்திலும்  போட்டுள்ளான்  என்றான்  பின்பு  குஜராத்  நீதிமன்றம்  என்ன  உச்ச  நீதிமன்றம  உச்ச  நீதிமன்றம்  சொல்லட்டும்  என்றான்  ஒரு  வாடா  இந்தியன்  அப்போதே  நான்  அந்த  வாதத்திலிருந்து  விலகிக்கொண்டேன்  ஏனென்றால்   உங்களுக்கு  புரிந்திருக்கும்  என்று  நினைக்கிறேன்  ஏன்  நான்  வாதத்தை  நிறுத்தினேன்  என்று   புரியாதவர்களுக்கு  சொல்கிறேன்  கேளுங்கள்  அவர்கள்தான்  அப்படி  நீங்களாவது  தெரிந்து  கொள்ளுங்கள்  நம்  நாட்டின்  சட்டத்தில்  எந்தவொரு  இடத்திலும்  ஹிந்தி  அதிகரப்ப்புர்வமாக  அறிவிக்கப்படவில்லை  என்பதைத்தான்  குஜராத்  உயர்  நீதிமன்றம்  மற்றும்  லோக்சபாவில்  திரும்பவும்  உறுதி  செய்துள்ளனர்   குஜராத்  நீதிமன்றம்  ஒன்றும்  புதிதாக  தீர்பளிக்கவில்லை  ஹிந்தி  தேசிய  மொழி  கிடையாது  என்று . பின்பு  எதற்கு  உச்சநீதிமன்றமும்  அதனை  உறுதிசெய்ய  வேண்டும்  என  நினைக்கிறீர்கள்  குஜராத்  நீதிமன்றம்  தெளிவாக  சொல்லிவிட்டது  எந்தவொரு  இடத்திலும்  நம்  சட்டத்தில்  இதுவரை  அதிகாரப்பூர்வமாக   குறிப்பிடவில்லை  என்று  புதிதாக  ஹிந்தி  நமது  தேசிய  மொழி  இல்லை  என்று  தீர்ப்பளித்திருந்தால்  நாம்  மீண்டும்  உச்ச  நீதிமன்றம்  தீர்ப்பளிக்கவேண்டும் என  இணைக்கலாம்  குஜராத்  நீதிமன்றம்  அதனை  தெளிவாக  சொல்லிவிட்டது  அதனால்  இதனைக்கூட  புரிந்துகொள்ள  முடியாத  அவர்களிடம்   நான்  பணிபுரிகிறேனே?!! என்று  வாதத்தை  இனியும்  தொடர்ந்தாள்  அது  நல்லதற்கில்லை  என்பதால்  முடித்துக்கொண்டேன்  நான்  செய்தது  சரிதானே ??!!! ஆனால்  அவர்கள்  நான்  அவர்களுக்கு  பயந்துதான்  நிறுத்தினேன்  என்று  நினைத்து  கொண்டிருக்கிறார்கள்???!! ஏனென்றால் இனியாவது நாம் நமது உறவினர் மற்றும் நமது குடும்பத்தாரிடம் இந்த தகவலை சொல்லவேண்டும் ஆனால் இப்போதுள்ள கால கட்டத்தில் ஹிந்தி கற்றுக்கொள்ளவேண்டிய ஒரு நிரபந்தத்தில் இருக்கிறோம் ஏனென்றால் நாம் ஹிந்தி தெரியாமல் மற்ற மாநிலங்களில் வேலை செய்வது மிகவும் கடினம் அதனால் நாம் அனைவரும் ஹிந்தி கற்றுக்கொள்ளவேண்டும் என்பதே தற்பொழுது என் கருத்து இது சரிதானா என்பதை நீங்கள்தான் கூறவேண்டும் ஏனென்றால் நான் இங்கு ஹிந்தி தெரியாமல் மிகவும் சிரமப்படுகிறேன்........    

No comments:

Post a Comment